ADDED : அக் 07, 2011 01:07 AM
காஞ்சிபுரம் : செங்கல்பட்டு அடுத்த வேண்பாக்கத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்.
இவரது மகள் கவிதா, 24. அங்குள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை செய்து வருகிறார். கடந்த 4ம் தேதி காலை 11 மணிக்கு வீட்டிலிருந்து, அலுவலகத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், கவிதாவின் கழுத்திலிருந்த ஒன்றரை சவரன் தங்க செயினை பறித்துச் சென்றார். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.


