நிலமோசடி: 2 அ.தி.மு.க.,வினர் நீக்கம்
நிலமோசடி: 2 அ.தி.மு.க.,வினர் நீக்கம்
நிலமோசடி: 2 அ.தி.மு.க.,வினர் நீக்கம்
ADDED : ஜூலை 21, 2011 02:28 PM
சென்னை: நிலமோசடியில் ஈடுபட்டதால், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 2 பேர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சேலம் அங்கம்மாள் காலனி நில மோசடி புகாரில், சேலம் 24வது வட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான சித்தானந்தம் மற்றும் சூரமங்கலம் பகுதி எம்.ஜி.ஆர்., மன்ற துணைத்தலைவர் கனகராஜ் ஆகியோர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கி அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், கனகராஜூவை போலீசார் கைது செய்துள்ளனர். சித்தானந்தத்தை தேடி வருகின்றனர்.