ADDED : ஆக 29, 2011 11:13 PM
திருத்தணி : லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலித் மக்கள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில கொள்கை பரப்பு செயலர் பழனி தலைமை வகித்தார்.ஒன்றியச் செயலர் செல்வம், நகரத் தலைவர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகரச் செயலர் மகேந்திரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தலித் மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வக்கீல் திருநாவுக்கரசு கலந்து கொண்டு பேசினார். தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரியும் பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்கள் தொடர்பாளர் முனிசாமி நன்றி கூறினார்.