/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பெண்கள் தமிழ் மொழியை மதிப்பதில்லை :கருத்தரங்கில் பேராசிரியர் கவலைபெண்கள் தமிழ் மொழியை மதிப்பதில்லை :கருத்தரங்கில் பேராசிரியர் கவலை
பெண்கள் தமிழ் மொழியை மதிப்பதில்லை :கருத்தரங்கில் பேராசிரியர் கவலை
பெண்கள் தமிழ் மொழியை மதிப்பதில்லை :கருத்தரங்கில் பேராசிரியர் கவலை
பெண்கள் தமிழ் மொழியை மதிப்பதில்லை :கருத்தரங்கில் பேராசிரியர் கவலை
ADDED : செப் 16, 2011 09:57 PM
கோவை : ''பெண்கள் தமிழ் மொழியை மதிப்பதில்லை; எவ்வளவு பணம் செலவிட்டேனும் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழியில்தான் படிக்க வைக்கின்றனர்'' என, டில்லி ஜவஹர்லால் பல்கலை பேராசிரியர் நாச்சிமுத்து பேசினார்.
கோவை பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியும், சாகித்ய அகாடமியும் இணைந்து, ''பேராசிரியர் இலக்குவனாரின் வாழ்வும் பணியும்'' என்ற தலைப்பில், கருத்தரங்கம் நடத்தினர். சாகித்ய அகாடமியின் தென்மண்டல செயலாளர் இளங்கோவன் வரவேற்றார். சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறை பேராசிரியர் மறைமலை இலக்குவனார், சாகித்திய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினர் மோகன், சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறை தலைவர் குருநாதன், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் யசோதாதேவி, தமிழ்த்துறைத் தலைவர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சாகித்திய அகாடமியின் தமிழ் ஆலோசனை குழு ஓருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி பேசியதாவது:
தமிழ் மொழிக்கும், அதன் மறுமலர்ச்சிக்கும் பங்காற்றிய தமிழறிஞர்களில் முக்கியமானவர், பேராசியர் இலக்குவனார். இவரின், தமிழ் உரிமை பெரும் பயணம்' தமிழக வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தனக்கு சரி என்று பட்டதை துணிச்சலோடு வெளிப்படுத்தியவர். தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றிய இலக்குவனாரின் நூற்றாண்டில், அவரின் தமிழ் பணி குறித்து சாகித்ய அகாடமி சார்பில் கருத்தரங்கு நடத்துவது பொருத்தமானது, என்றார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை தமிழ்த்துறை தலைவர் நாச்சிமுத்து பேசியது: உலகமய சூழலில், நமது மொழி, பண்பாடு கலாசாரம் அனைத்தும் மறையும் நிலையில் உள்ளது. இந்தி, இந்தியர் அனைவருக்கும் பொது மொழியாகவும், தேசிய மொழியாகவும் உள்ளதால் தப்பி பிழைத்துள்ளது. பெரும்பாலான பெண்கள் தமிழ் மொழியை மதிப்பதில்லை; இவர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழியில்தான் படிக்க வைக்கவேண்டும்; வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று விரும்புகின்றனர். தமிழின் அழகையும், பெருமையையும் கற்றுக் கொடுக்கும் பேராசிரியர்கள் பலரே, தமிழ் என்ற சொல்லையே தவறாக உச்சரிக்கிறார்கள், என்றார்