/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பூம்புகார் நிலையத்தில் கொலு பொம்மை கண்காட்சிபூம்புகார் நிலையத்தில் கொலு பொம்மை கண்காட்சி
பூம்புகார் நிலையத்தில் கொலு பொம்மை கண்காட்சி
பூம்புகார் நிலையத்தில் கொலு பொம்மை கண்காட்சி
பூம்புகார் நிலையத்தில் கொலு பொம்மை கண்காட்சி
ADDED : செப் 16, 2011 01:24 AM
ஈரோடு: ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில், நேற்று முதல் கொலு பொம்மை கண்காட்சி துவங்கியது.
கைவினைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சந்தை வாய்ப்பை ஏற்படுத்தவும் நவராத்திரியை முன்னிட்டு, கொலு பொம்மை கண்காட்சி நேற்று துவங்கியது. விற்பனையை எஸ்.பி., ஜெயச்சந்திரன் துவக்கி வைத்தார். பூம்புகார் மேலாளர் ஆறுமுகம் கூறியதாவது: விநாயகர், பசுவுடன் கிருஷ்ணர், வெண்ணெய் கிருஷ்ணர், கருமாரியம்மன், கஜலட்சுமி, குருவாயூரப்பன், அஷ்டலட்சுமி, ராமர் செட், கோபியர் செட், தாத்தா பாட்டி செட், தசாவதாரம் செட், கல்யாண செட், பிட்டுக்கு மண் சுமத்தல், பிரஹலாதன் செட், ஆழ்வார்கள் செட், நால்வர் செட், பஜனை செட், வைகுண்டம் செட், பார்க் செட், அறுபடை செட், வைகுண்டம் செட், நரசிம்மர், லட்சுமிநாராயணன், சாய்பாபா, காயத்ரி, ராதாகிருஷ்ணன் உட்பட பல்வேறு கொலு பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன. 66 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரையான விலையில் பொம்மைகள் உள்ளன, என்றார்.


