"தற்போதைய நிலவரம்'உளவுத்துறை சுறுசுறுப்பு
"தற்போதைய நிலவரம்'உளவுத்துறை சுறுசுறுப்பு
"தற்போதைய நிலவரம்'உளவுத்துறை சுறுசுறுப்பு
ADDED : செப் 25, 2011 06:11 AM
கம்பம்:அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடுவதால் தற்போதுள்ள தேர்தல் நிலவரம் குறித்து 'தற்போதைய நிலவரம்' என்ற தலைப்பில், உளவுத்துறை, மாவட்ட வாரியாக அறிக்கை தயார் செய்து வருகிறது.அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்ட போது இருந்த நிலைக்கும், தற்போது கட்சிகள் தனித்து போட்டி என்ற நிலைக்கும் உள்ள வித்தியாசம் குறித்து அறிக்கை தயாரிக்க உளவுத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.நகராட்சிகளில், 'தற்போதைய நிலவரம்' என்ற தலைப்பில் அறிக்கை தயாரிக்கும் பணியில் உளவுத்துறை இறங்கியுள்ளது.
ஜாதி, கட்சி, வேட்பாளர் பலம், பலவீனம், பணம், சொந்த செல்வாக்கு, கட்சியின் பலம் போன்ற விவரங்கள் சேகரித்து அறிக்கை அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.