/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பேய்க்குளம் அருகே பிளஸ்1 மாணவன் மர்மச்சாவு : கிணற்றில் உடல் மீட்புபேய்க்குளம் அருகே பிளஸ்1 மாணவன் மர்மச்சாவு : கிணற்றில் உடல் மீட்பு
பேய்க்குளம் அருகே பிளஸ்1 மாணவன் மர்மச்சாவு : கிணற்றில் உடல் மீட்பு
பேய்க்குளம் அருகே பிளஸ்1 மாணவன் மர்மச்சாவு : கிணற்றில் உடல் மீட்பு
பேய்க்குளம் அருகே பிளஸ்1 மாணவன் மர்மச்சாவு : கிணற்றில் உடல் மீட்பு
ADDED : செப் 15, 2011 11:51 PM
பேய்க்குளம் : பேய்க்குளம் அருகே பிளஸ் 1 மாணவன் மர்மமான முறையில் கிணற்றில் இறந்துகிடந்தான்.
இதுகுறித்துபோலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாசரேத் மூக்குபேரியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுடலை(16). இவர் குருகால்பேரியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்துவந்தார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி ஊருக்கு செல்வதாக தன்னுடன் படித்த நண்பர்களிடம் சொல்லிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலையில் பள்ளியில் உள்ள மாணவர்கள் அங்கிருந்த கிணறு ஒன்றில் எட்டிபார்த்போது மாணவன் பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆஸ்டல் வார்டன் ராஜா சாத்தான்குளம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


