Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/லண்டன்-டில்லி வரை சைக்கிள் பயணம் : மனிதநேயம் வலியுறுத்தி ஆந்திரா வாலிபர் சாதனை

லண்டன்-டில்லி வரை சைக்கிள் பயணம் : மனிதநேயம் வலியுறுத்தி ஆந்திரா வாலிபர் சாதனை

லண்டன்-டில்லி வரை சைக்கிள் பயணம் : மனிதநேயம் வலியுறுத்தி ஆந்திரா வாலிபர் சாதனை

லண்டன்-டில்லி வரை சைக்கிள் பயணம் : மனிதநேயம் வலியுறுத்தி ஆந்திரா வாலிபர் சாதனை

ADDED : ஆக 27, 2011 11:49 PM


Google News

திருச்சி: மனிதநேயம் காக்க வலியுறுத்தி, 'லண்டன்-டில்லி' வரையிலான சைக்கிள் பயணம் மேற்கொண்டு திருச்சி வந்த ஆந்திரா வாலிபரை, போலீஸ் கமிஷனர் மாசானமுத்து வரவேற்றார்.

ஆந்திரா மாநிலம், ராஜமுந்திரி சீனிவாசா அல்லூரி (39). எம்.சி.ஏ., பட்டதாரி. திருமணமாகாதவர். சுற்றுச்சூழல், மனிதநேயம் மீது மிகவும் அக்கறை கொண்ட இவர், ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு, 'சாந்தாத்தா' என்ற ஐ.டி., நிறுவனம் நடத்தி வருகிறார். தவிர, 'மானவாதா' என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 1991ம் ஆண்டு துவங்கிய இந்நிறுவனம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பெரும்பாலும் சைக்கிளில் சென்றே தனது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து வருகிறார். 15 உறுப்பினர்களுடன் துவங்கப்பட்ட, 'மானவாதா' என்ற இந்த அமைப்பில், 7,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். நடப்பாண்டு மனிதநேயத்துக்கான, 'லண்டன்-டில்லி' வரையிலான சைக்கிள் பயணத்தை சீனிவாசா, துவக்கியுள்ளார். கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி லண்டனில் தனது சைக்கிள் பயணத்தை துவக்கினார். லண்டன், ஃபிரான்ஸ், பெல்ஜியம், லக்ஸம்பெர்க், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவோக்கியா, ஹங்கேரி, செர்பியா, மெசடோனியா, கிரீஸ், துருக்கி, ஈரான் ஆகிய, 13 நாடுகளில் தனது பயணத்தை நடத்தியுள்ளார். ஈரான் நாட்டின் டெக்ரான் நகரத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலம் வந்த சீனிவாசா, கன்னியாகுமரியிலிருந்து சைக்கிள் பயணத்தை துவங்கி டில்லி செல்கிறார். இதுவரை மொத்தம், 10 ஆயிரம் கி.மீ., சைக்கிள் பயணத்தில், 6,850 கி.மீ., தூரத்தை கடந்துள்ளார். மனிதநேயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்றவை குறித்து விழிப்புணர்வு செய்து வருகிறார். இதுவரை, 800 இந்திய குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். நடப்பாண்டு, 100 குழந்தைகளும், அடுத்தாண்டு, 500 குழந்தைகளையும் தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். சைக்கிள் பயணத்தின் போது, முளைகட்டிய பயிர்களை மட்டுமே உட்கொள்கிறார். 'டூரிஸ்ட்'கள் பயன்படுத்தும் சைக்கிளை மட்டுமே பயன்படுத்துகிறார். உடன், 50 கிலோ எடையுள்ள தனக்கு தேவையான துணி மற்றும் பொருட்களை எடுத்துச் செல்கிறார். பல்வேறு நாடுகளில் சுற்றித்திரிந்த அவரின் உண்மையான நிறமே மாறியிருந்தது. கன்னியாகுமரியிலிருந்து வரும் வழியில் பள்ளி, கல்லூரிகளில் மனிதநேயம், உலக அமைதி குறித்து வகுப்பு நடத்தி வருகிறார். அக்டோபர் 2ம் தேதி டில்லியில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார். மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து திருச்சிக்கு வந்த அவரை மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து வரவேற்றார்.



இதுகுறித்து சீனிவாசா கூறியதாவது: நாள்தோறும் வெறும் பயணங்கள் மட்டும் செய்வதில்லை. இடையிடையே கருத்தரங்கு, மருத்துவ முகாமில் பங்கேற்கிறேன். துருக்கி போன்ற நாடுகளில் கடுமையான வெப்பம் இருக்கும். சில இடங்களில் காட்டு நாய்கள் என்னை வழிமறித்துள்ளன. அவற்றிலிருந்து தப்பித்து வருவதுக்குள் பெரும்பாடாகிவிடும். மனிதநேயம் வளர்க்கவும், உலகில் அமைதி, அன்பை பேணிக்காகக்கவும் இந்த பயணத்தை எங்கள் 'மானவாதா' அமைப்பு மேற்கொண்டுள்ளது என்றார். கமிஷனர் மாசானாமுத்து, ''நான் லண்டன் சென்றிருந்த போது, எனது மருமகன் கலைச்செல்வன் இவருடன் 150 கி.மீ., சைக்கிள் பயணம் சென்றார். அப்போது தான் இவரைப் பற்றி தெரிந்தது. இவரைப்போன்ற மனிதநேய ஆர்வலர்களை ஊக்குவிக்க வேண்டும். அவருக்கு தேவையான ஏற்பாடுகளை இங்கு நான் செய்து கொடுத்துள்ளேன் என்றார். திருச்சியிலிருந்து சென்னை, விசாகப்பட்டினம், ஒரிஸா, உத்தரபிரதேசம், சட்டீஸ்கர், ஆக்ரா வழியாக டில்லி செல்கிறார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us