ஒட்டன்சத்திரத்தில் கல் குவாரிக்கு எதிர்ப்பு : திண்டுக்கல் கலெக்டர் பதிலளிக்க உத்தரவு
ஒட்டன்சத்திரத்தில் கல் குவாரிக்கு எதிர்ப்பு : திண்டுக்கல் கலெக்டர் பதிலளிக்க உத்தரவு
ஒட்டன்சத்திரத்தில் கல் குவாரிக்கு எதிர்ப்பு : திண்டுக்கல் கலெக்டர் பதிலளிக்க உத்தரவு
ADDED : ஜூலை 30, 2011 04:16 AM
மதுரை : திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் கல் குவாரி தொழிற்சாலை அமைக்க, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு திண்டுக்கல் கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த ஆர்.வேலுசாமி ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ரிட்: ஊரில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகளும், 300 குடியிருப்புகளும் உள்ளது. இங்கு, 500 ஏக்கர் பரப்பில் கல் குவாரி தொழிற்சாலை அமைக்க ஏ.வேலுசாமி முயற்சி எடுத்து வருகிறார். இங்கு தொழிற்சாலை அமைந்தால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு, காற்று மாசடையும்; வீடுகளில் விரிசல் ஏற்படும். எனவே, இதற்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இம்மனு நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் லெனின்குமார், தண்டபாணி ஆஜராயினர். மனு மீது இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க திண்டுக்கல் கலெக்டருக்கு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.