எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஆக 20, 2011 06:41 PM
கோவை: கற்பகம் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
ஈச்சனாரியிலுள்ள கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பி.சி. ஆர்.ஏ., அமைப்பின் உதவி இயக்குனர் ராஜ்குமார் பேசுகையில்,'' தற்போது பெட்ரோலிய பொருட்களே எரிபொருளாக பயன் படுத்தப்படுகிறது. இயற்கையாக கிடைக்கும் இப்பொருளின் வளம் குறைந்து வருகிறது. வரும் காலங்களில், ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தும் நிலை உருவாகும். கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்து வருவதால், தட்பவெப்ப மாற்றங்கள் ஏற்படுகின்றன. இயற்கை சூழலிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. பாலைவனப் பகுதிகள், வளமான பகுதியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க, அதிகளவு மரங்களை வளர்க்கவேண்டும்,'' என்றார்.
மாணவர்கள் கல்லூரி மற்றும் பல்கலை வளாகத்தில், எரிபொருள் சேமிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் ஒட்டினர். கோவை - பொள்ளாச்சி ரோட்டில் சென்ற, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக் கும் நோட்டீஸ் வழங்கி, எரிபொருள் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வர் ராஜா, ஜெகதீசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.