/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தொடர்ந்து இழுபறியில்சாஸ்திரி நகர்மேம்பாலம்தொடர்ந்து இழுபறியில்சாஸ்திரி நகர்மேம்பாலம்
தொடர்ந்து இழுபறியில்சாஸ்திரி நகர்மேம்பாலம்
தொடர்ந்து இழுபறியில்சாஸ்திரி நகர்மேம்பாலம்
தொடர்ந்து இழுபறியில்சாஸ்திரி நகர்மேம்பாலம்
ADDED : செப் 19, 2011 01:16 AM
ஈரோடு: ஈரோடு, சாஸ்திரி நகரில் உள்ள இரண்டு ரயில்வே கேட்களில் மேம்பாலம்
அமைக்க அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.ஈரோடு, சாஸ்திரி நகர் அருகே இரண்டு
ரயில்வே கேட்கள் வழியாக தினசரி 122 பயணிகள் ரயில்கள், 40 சரக்கு ரயில்கள்
சென்று வருகின்றன. ரயில்வே கேட்கள் அடிக்கடி மூடப்படுவதால், இப்பகுதி
மக்களால், உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடிவதில்லை.இது குறித்து ஈரோடு
எம்.பி., கணேசமூர்த்தி கடிதம் மூலமாகவும், பார்லிமென்டில் பேசியும்
உள்ளார்.
தமிழக நெடுஞ்சாலைத் துறை முன்னாள் அமைச்சரும், மேம்பாலம் அமைக்க அனுமதி
வழங்கியுள்ளார். ஆனால், இதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல்
காலதாமதம் செய்யப்படுகிறது.இப்பகுதியில் இரண்டு மேம்பாலம் அமைக்க துரித
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.


