ADDED : ஜூலை 15, 2011 10:10 PM
பெரியகுளம் : பெரியகுளம் மேலக்காமக்காபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35).
நேற்று, பெரியகுளத்திலிருந்து- வடுகபட்டிக்கு டாடாசுமோ காரை ஓட்டி சென்றார். சுடுகாடு அருகே சென்ற போது கார் நிலைதடுமாறி ரோட்டோர தென்னை மரங்கள் மீது மோதியது. இதில் இரண்டு தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. படுகாயமடைந்த ரமேஷ், பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரில் அனுமதிக்கப்படு இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


