Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/இலவச கால்நடைகளை விற்றால் கிரிமினல் வழக்கு : கால்நடைத்துறை அதிகாரி எச்சரிக்கை

இலவச கால்நடைகளை விற்றால் கிரிமினல் வழக்கு : கால்நடைத்துறை அதிகாரி எச்சரிக்கை

இலவச கால்நடைகளை விற்றால் கிரிமினல் வழக்கு : கால்நடைத்துறை அதிகாரி எச்சரிக்கை

இலவச கால்நடைகளை விற்றால் கிரிமினல் வழக்கு : கால்நடைத்துறை அதிகாரி எச்சரிக்கை

ADDED : செப் 18, 2011 01:12 AM


Google News

சேலம்: தமிழகம் முழுவதும், இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம் துவங்கும் முன்பாகவே, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 10 நாட்களுக்கு முன்பாகவே, ஆடு, மாடுகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பராமரிப்புத்தொகை, 2,000 ரூபாயும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள கணவனை இழந்த பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் பெறும் வகையில், இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, மூன்று வெள்ளாடு, இனப்பெருக்கத்துக்காக ஆண் ஆடு ஒன்றும் வழங்கப்படும். பால் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு, கறவை மாடு ஒன்று வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.



முதல்வர் ஜெயலலிதா, திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில், 10 நாட்களுக்கு முன்னதாகவே, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் விரும்பும் சந்தையில் ஆடு, மாடுகள் வாங்கி கொடுக்கப்பட்டன. அதை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பிற மாவட்டங்களில், நேற்று தான் ஆடு, மாடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஏற்கனவே, ஆடு, மாடுகளை பெற்ற பயனாளிகள், அமைச்சர்கள் துவக்கி வைக்கும் விழா என்பதால், ஆடுகளுடன் வந்து கலந்து கொண்டனர்.

முதல்வர் திட்டத்தை துவக்கும் முன், எப்படி ஆடு, மாடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, பராமரிப்பு செலவு, 2,000 ரூபாய், போக்குவரத்து செலவு, 150 ரூபாயும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு பயனாளிக்கான மொத்த செலவு, 12 ஆயிரத்து, 500 ரூபாயாகும். மாடுகளைப் பொறுத்தவரை, பல மாவட்டங்களில் மூன்று ஆண்டுக்கு அத்திட்டம் அமல்படுத்தப்போவதில்லை. தற்போது, ஆடுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.



சேலம் கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம் செயல்படத் துவங்கி உள்ளது. 10 நாட்களுக்கு முன், பயனாளிகளுக்கு அவர்கள் விரும்பும் சந்தையில் சென்று ஆடுகளை வாங்கி கொடுத்தோம். போக்குவரத்து செலவு, பராமரிப்பு செலவுத்தொகை, 2,000 ரூபாய் கொடுத்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு அவற்றை விற்கக்கூடாது, என்று எழுதி வாங்கியுள்ளோம். அவ்வாறு விற்பனை செய்தால், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்போம், எனத் தெரிவித்துள்ளோம். சேலம் மாவட்டத்தில், முதல் கட்டமாக, 70 கிராமங்களில், 5,396 பயனாளிகளுக்கு இலவச கால்நடைகள்வழங்கப்பட உள்ளது. திட்டம் துவக்க விழாவில், 60 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மாடுகள் வழங்கும் திட்டம், இம்மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் நிறைவேற்றப்படும். தமிழகம் முழுவதும் பயனாளிகளை தேர்வு செய்தவுடனேயே, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கால்நடைகள் வாங்கிக் கொடுக்கப்பட்டன. துவக்க விழாவில், அவர்கள் தங்களுக்கு வழங்கிய ஆடுகளுடன் வந்து கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us