/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அகில பாரத மூத்த பென்ஷனர் கூட்டமைப்புக் கூட்டம்அகில பாரத மூத்த பென்ஷனர் கூட்டமைப்புக் கூட்டம்
அகில பாரத மூத்த பென்ஷனர் கூட்டமைப்புக் கூட்டம்
அகில பாரத மூத்த பென்ஷனர் கூட்டமைப்புக் கூட்டம்
அகில பாரத மூத்த பென்ஷனர் கூட்டமைப்புக் கூட்டம்
ADDED : ஜூலை 27, 2011 11:12 PM
கடலூர் : கடலூரில் அகில பாரத மூத்த குடிமக்கள் பென்ஷனர் கூட்டமைப்புக் கூட்டம் நடந்தது.மாவட்ட செயல் தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார்.
கூட்டமைப்பு தலைவர் ராமலிங்கம், துணைத் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்கள் செயலர் கலியபெருமாள், நாகராஜன் பேசினர்.கூட்டத்தில் தமிழக அரசு ஓய்வூதிய அலுவலக இயக்குனர் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழக அரசு 2006 நிலுவை உட்பட பென்ஷனர் நிலுவை கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும். கடலூர் துப்புரவு பணியாளர் பென்ஷன் ஆணைகளை உள்ளாட்சி இயக்குனர் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீனதயாளன் நன்றி கூறினார்.


