/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விருதுநகர் நர்சிங் கல்லூரி விடுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய மாணவிவிருதுநகர் நர்சிங் கல்லூரி விடுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய மாணவி
விருதுநகர் நர்சிங் கல்லூரி விடுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய மாணவி
விருதுநகர் நர்சிங் கல்லூரி விடுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய மாணவி
விருதுநகர் நர்சிங் கல்லூரி விடுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய மாணவி
விருதுநகர் : விருதுநகர் ஆஸ்பத்திரி நர்சிங் கல்லூரி விடுதியில், துணியால் கைகள் கட்டப்பட்ட நிலையில், மாணவி பிணமாக தூக்கில் தொங்கினார்.
இது குறித்து நேற்று முன் தினம் இரவு தனது தாயிடம் போனில் பேசிய தாமரை செல்வி,''சித்தி மகனிடம் போனில் பேசியதை தவறாக புரிந்து கொண்ட வார்டன், தன்னை திட்டியதாக,'' கூறி உள்ளார். அதன்பின், மாணவி கைகள் துணியால் கட்டப்பட்டு, விடுதியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இத்தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் வருவதற்கு முன் மாணவி உடலை பிரேத பரிசோதனை செய்து, அவர் தற்கொலை செய்ததாக விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், அதிர்ச்சியுற்ற பெற்றோர் மற்றும் கிராம மக்கள் மாணவி இறப்பில் மர்மம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரி காரியாப்பட்டி ரோட்டில் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு பதட்ட நிலை உருவாகி,போலீசார் குவிக்கப்பட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அருமைநாயகம் ஆர்.டி.ஓ.,ஜெயசந்திரன் ஏ.டி.எஸ்.பி., ராமமூர்த்தி டி.எஸ்.பி., மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 'விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என, கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். மாணவி எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் ,''சாவுக்கு யாரும் கரணம் இல்லை.நான் போனில் பேசியதை சக மாணவி ஒருவர் வார்டனிடம் கூறியதால், அவர் என்னை திட்டினார்.எனது சித்தி மகன் விபத்தில் காயமுற்று ஆஸ்பத்திரியில் உள்ளார். இதை விசாரிக்க தான் அவரிடம் போனில் பேசினேன்,'' என,குறிப்பிட்டுள்ளார்.