வால்பாறையில் மீண்டும் யானை கலாட்டா
வால்பாறையில் மீண்டும் யானை கலாட்டா
வால்பாறையில் மீண்டும் யானை கலாட்டா
ADDED : செப் 02, 2011 11:15 PM
வால்பாறை : வால்பாறை அருகே காட்டுயானைகள் எஸ்டேட் மருந்து குடோனை சூறையாடியது.
வால்பாறை, சக்தி எஸ்டேட் பகுதியில் நேற்று முன் தினம் இரவு 5 காட்டுயானைகள் புகுந்தது. பின்னர் எஸ்டேட் ஸ்டாப்ஸ் குடியிருப்புக்கதவு, ஜன்னல்களை உடைத்தது, பின்னர் அலுவலகத்தை ஒட்டியுள்ள மருந்து குடோனை உடைத்து, மருந்துகளை வெளியே இழுத்துப்போட்டு சேதப்படுத்தியது. அதன் பின் எஸ்டேட் லாரியின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது. எஸ்டேட் மருத்துவமனையை சூறையாடியதில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. காட்டுயானைகள் மருந்து குடோன் மற்றும் குடியிருப்புக்களை இடிப்பதை அறிந்த இப்பகுதி தொழிலாளர்கள் கொட்டும் மழையில் இரவு நேரத்தில் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.