/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குறுகலான பஸ் ஸ்டாண்ட்: மக்கள் "குமுறல்'குறுகலான பஸ் ஸ்டாண்ட்: மக்கள் "குமுறல்'
குறுகலான பஸ் ஸ்டாண்ட்: மக்கள் "குமுறல்'
குறுகலான பஸ் ஸ்டாண்ட்: மக்கள் "குமுறல்'
குறுகலான பஸ் ஸ்டாண்ட்: மக்கள் "குமுறல்'
ADDED : செப் 02, 2011 11:07 PM
வால்பாறை : வால்பாறை அருகே குறுகலான பஸ் ஸ்டாண்டினால் பயணிகள் நிற்க இடம் இடமில்லாமல் தவிக்கின்றனர்.வால்பாறையிலிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ளது முடீஸ் பஜார்.
இதை சுற்றி கெஜமுடி, தோணிமுடி, நல்லமுடி, ஆனைமுடி, ஹைபாரஸ்ட், பன்னிமேடு, முத்துமுடி உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்கள் உள்ளன. வால்பாறையிலிருந்து வரும் அனைத்துபஸ்களும் முடீஸ் பஜார் வழியாக தான் எஸ்டேட் பகுதிகளுக்கு செல்கின்றன. குறிப்பாக சோலையாறு அணை, சாலக்குடி உள்ளிட்டப்பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் முடீஸ் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து தான் செல்கின்றன. ஆனால் இங்குள்ள பஸ் ஸ்டாண்டு நிழற்க்கூடை போல் ஒரே பஸ் மட்டுமே நிற்க கூடிய அளவில் இருப்பதால் ஒரே நேரத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்தால் மக்கள் திறந்த வெளியில் நின்று பஸ் ஏறவேண்டியுள்ளது. காட்டும் மழையிலும், கொளுத்தும் வெய்யிலிலும் பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பல மணி நேரம் கால்கடுக்க காத்திருந்து பஸ்சில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை மாற குறுகலாக உள்ள இந்த பஸ் ஸ்டாண்டை வால்பாறை நகராட்சி சார்பில் விரிவு படுத்தி, பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.