சேதமடைந்த வால்வு வீணாகும் குடிநீர்
சேதமடைந்த வால்வு வீணாகும் குடிநீர்
சேதமடைந்த வால்வு வீணாகும் குடிநீர்
ADDED : ஆக 28, 2011 10:16 PM
ரெட்டியார்சத்திரம் : குட்டத்துபட்டி ஊராட்சி முத்தனம்பட்டி புதூரில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் கேட்வால்வு சேதமடைந்து, குடிநீர் வீணாகிவருகிறது.
முத்தனம்பட்டிபுதூரில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. தொட்டியிலிருந்து வரும் குழாயின் கேட்வால்வு சேதமடைந்து பல வாரங்களாக குடிநீர் வீணாகிவருகிறது. கேட்வால்வை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க, இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் பலனில்லை. இந்நிலை தொடர்ந்தால் குடிநீர் வினியோகம் துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த வால் வை சீரமைத்து, குடிநீர் வீணாவதை தடுக்கவும், குடிநீர் வினியோகத்தை சீராக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்