ADDED : ஆக 14, 2011 10:50 PM
வால்பாறை : 'வால்பாறையில் பசுமாடுகளை இறைச்சிக்காக வதை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
வால்பாறை டவுன் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் இறைச்சிக்கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளில் பசுக்களை இறைச்சிக்காக வெட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து நகராட்சி செயல்அலுவலர் சுப்பிரமணியத்திடம் கேட்ட போது, 'இறைச்சிக்கடைகளில் விதிமுறையை மீறி யாரேனும் பசுக்களை இறைச்சிக்காக வதப்படுத்தினால் அவர்கள் மீது பசுவதை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.