/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காய்கறி பயிரிட்டால் கூடுதல் லாபம் பெறலாம்காய்கறி பயிரிட்டால் கூடுதல் லாபம் பெறலாம்
காய்கறி பயிரிட்டால் கூடுதல் லாபம் பெறலாம்
காய்கறி பயிரிட்டால் கூடுதல் லாபம் பெறலாம்
காய்கறி பயிரிட்டால் கூடுதல் லாபம் பெறலாம்
ADDED : ஆக 03, 2011 10:55 PM
அன்னூர் : எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு காய்கறி விதை வழங்கப்பட்டது.
காளிபாளையம் கிராமத்தில் சர்க்கார் சாமக்குளம் வட்டார விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத்துறை சார்பில், ஆடிப்பட்டத்திற்கான காய்கறி விதை வழங்கும் முகாம் நடந்தது. காளிபாளையம், வெள்ளமடை, கீரணத்தம் பகுதியிலிருந்து விவசாயிகள் பங்கேற்றனர். தக்காளி, மிளகாய், அவரை, முருங்கை மற்றும் புடலை விதைகள் வழங்கப்பட்டன. தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரேமலதா பேசுகையில்,''மண் பரிசோதனை செய்து, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப காய்கறிகளை தேர்வு செய்து பயிரிட்டு, கூடுதல் மகசூல் எடுப்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம்,'' என்றார். முகாமில், விவசாயி கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். உதவி வேளாண் அலுவலர்கள் மணி, ரவிக்குமார், தியாகு உட்பட பலர் பங்கேற்றனர்.


