/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/விநாயகர் சிலைகள் வைக்க தடைவிதித்த போலீஸ் அதிகாரிகள் குறித்து முதல்வரிடம் புகார்விநாயகர் சிலைகள் வைக்க தடைவிதித்த போலீஸ் அதிகாரிகள் குறித்து முதல்வரிடம் புகார்
விநாயகர் சிலைகள் வைக்க தடைவிதித்த போலீஸ் அதிகாரிகள் குறித்து முதல்வரிடம் புகார்
விநாயகர் சிலைகள் வைக்க தடைவிதித்த போலீஸ் அதிகாரிகள் குறித்து முதல்வரிடம் புகார்
விநாயகர் சிலைகள் வைக்க தடைவிதித்த போலீஸ் அதிகாரிகள் குறித்து முதல்வரிடம் புகார்
ADDED : செப் 06, 2011 12:47 AM
உடன்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் உயர் போலீஸ் அதிகாரிகள் குறித்து தமிழக முதல்வரிடம் நேரில் புகார் தெரிவிக்கப் போவதாக இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
உடன்குடி பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் ஈழத்தில் வடிவது இந்து மக்கள் ரத்தம் என்ற சிடியை வெளியிட்டு நிருபர்களிடம் பேசியதாவது, உடன்குடி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் சுமார் 45 விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான முன் அனுமதி குறித்து முறைப்படி போலீஸ் உயர் அதிகாரிகளிடம் விண்ணப்ப மனுவும் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் சில போலீஸ் அதிகாரிகள் இந்து மக்கள் கட்சி மீது தவறான தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே எங்களை அழைக்கழித்தனர். பின்னர் 13 இடங்களில் மட்டுமே அனுமதி அளித்துவிட்டு மீதியுள்ள சிலைகளை வாகைவிளையில் அறையில் வைத்து பூட்டிவிட்டனர். இச்செயல் எங்களது வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலாகும். இதுபோன்ற சுயநலமாக செயல்படும் போலீஸ் உயர்அதிகாரிகள் குறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க உள்ளேன். ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு முக்கிய காரணம் மத்திய அரசுதான். ஈழத்தில் கொல்லப்பட்ட அனைவரும் இந்துக்கள். பெரும்பான்மையாக இந்துக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். அண்டை நாட்டில் இந்துக்களை படுகொலை செய்துள்ளனர். ஆனால் இந்தியா எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலில் கட்சி சின்னங்கள் பயன்படுத்தக் கூடாது. இதனால் உள்ளாட்சியில் நேர்மையான நிர்வாகம் நடக்காது. இந்து மக்கள் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் ராமகுணசீலன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர் ரவிகிருஷ்ணன், உடன்குடி வட்டார தலைவர் தினகர், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாலன் உட்பட பலர் உடனிருந்தனர்.