Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணி திருவாரூரில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணி திருவாரூரில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணி திருவாரூரில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணி திருவாரூரில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

ADDED : அக் 10, 2011 02:58 AM


Google News
திருவாரூர்: நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள ஓட்டுச் சீட்டுகள் அச்சடிக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் முனியநாதன், தேர்தல் பார்வையாளர் விஜயராஜ்குமார் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.திருவாரூர், நன்னிலம், நீடாமங்கலம், கொரடாச்சேரி ஆகிய யூனியன் பகுதிகளுக்கான ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணிகள் திருவாரூர் தம் பா ஆப்செட் பிரிண்டர்ஸில் நடந்து வருகிறது.அங்கு சென்ற கலெக்டர் முனியநாதன் மற்றும் தேர்தல் பார்வையார் விஜயராஜ்குமார் ஆகியோர் ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணிகளை பார்வையிட்டு, அச்சடிக்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் காகித கழிவுகளை வெளியில் கொட்டக் கூடாது என்றும், ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் முன்னிலையில் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினர்.திருவாரூர் மூகாம்பிகை பவர் பிரசில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, குடவாசல், வலங்கைமான் ஆகிய யூனியன் பகுதிகளுக்கான ஓட்டுச்சீட்டுகள் அச்சடிக்கும் பணிகளை கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர் அச்சடிக்கப்பட்ட ஓட்டுச்சீட்டுக்களை சரிபார்க்கும் அரசு அலுவலர்களிடம் ஒவ்வொரு சீட்டையும் சரிபார்த்து அதற்கான படிவத்தில் கையொப்பம் இட வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏழு டவுன் பஞ்சாயத்து மற்றும் நான்கு நகராட்சி பகுதிகளுக்கான ஓட்டுச்சீட்டுகள் திருவாரூரில் உள்ள 'மை' கிராப்பிக்ஸ் பிரஸில் அச்சடிக்கப்படுவதை கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர் அச்சடிக்கப்பட்ட ஓட்டுச்சீட்டுக்களை வாங்கி பார்த்து விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.மன்னார்குடி மற்றும் கோட்டூர் யூனியன் பகுதிகளுக்கான ஓட்டுச்சீட்டுகள் கூத்தாநல்லூர் பிரைட் ஆப்செட் பிரிண்டர்சில் ஆய்வு செய்த கலெக்டர், தேர்தல் பார்வையாளர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் எத்தனை மணி நேரம் உங்களுக்கு பணி, உங்களுடைய மாற்று போலீஸார் எத்தனை மணி க்கு வர வேண்டும் என்ற விபரங்களை கேட்டறிந்தார்.

அனுமதிக்கப்பட்ட மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களை தவிர வேறு யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்க கூடாது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினர்.முன்னதாக திருவாரூர் நகராட்சியில் நடந்த தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள ஓட்டுச்சாவடி மற்றும் ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பை கலெக்டர், தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு செய்தனர்.அங்கு செய்முறை விளக்கம் அளிக்க வைக்கப்பட்டிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாளும் விதம் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.ஆய்வில், மாவட்ட பஞ்., தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திட்ட இயக்குனர் சுப்ரமணியன், ஆர்.டி.ஓ., ஸ்ரீராமன் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us