ADDED : அக் 09, 2011 01:37 AM
மதுரை : மதுரை பொன்மேனியைச் சேர்ந்தவர் செல்லச்சாமி, 72.
நேற்று காலை அப்பகுதி முனியாண்டி கோயில் அருகே நடந்து சென்ற போது, மாடக்குளத்தை சேர்ந்த கருப்பையா என்பவரின் டூவீலர் மோதியதில் காயமடைந்தார். அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். மக்கள் கூறுகையில், ''முனியாண்டி கோயில் அருகே ரோட்டை ஆக்கிரமித்து லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று காலை செல்லச்சாமி, லாரியை கடந்து வந்தபோதுதான் விபத்தில் சிக்கி இறந்தார்,'' என்றனர். இனியாவது இன்னொரு உயிர் பலியாகாமல் இருக்க, போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?


