ADDED : அக் 04, 2011 11:28 PM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியம் மல்லாகோட்டையை சேர்ந்த முனியசாமி
மனைவி புவனேஸ்வரி,20. இவர் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர். உள்ளாட்சி
தேர்தலில் மல்லாகோட்டை ஊராட்சி 1 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு
மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வார்டில் வேறு யாரும் மனு தாக்கல்
செய்யாதால் இவர் போட்டியின்றி வெற்றி பெறவிருந்தார்.நேற்று முன்தினம் கணவன்
மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் புவனேஸ்வரி தற்கொலை செய்து
கொண்டார்.
போட்டியின்றி பதவி கிடைத்தது. விதி அவரை பதவி ஏற்க விடவில்லை.


