சென்னை சொதப்பல் கிங்ஸ்: டிரினிடாட் அணி அசத்தல் வெற்றி
சென்னை சொதப்பல் கிங்ஸ்: டிரினிடாட் அணி அசத்தல் வெற்றி
சென்னை சொதப்பல் கிங்ஸ்: டிரினிடாட் அணி அசத்தல் வெற்றி

சென்னை: சாம்பியன்ஸ் லீக் போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்ப, சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தியாவில் மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் 'டுவென்டி-20 தொடர் நடக்கிறது. நேற்று இரவு சென்னையில் நடந்த 'ஏ பிரிவு லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டிரினிடாட் அண்ட் டுபாகோ(வெ.இண்டீஸ்) அணிகள் மோதின. 'டாஸ் வென்ற டிரினிடாட் அணி கேப்டன் டேரன் கங்கா 'பேட்டிங் தேர்வு செய்தார். டிரினிடாட் அணிக்கு சிம்மன்ஸ், பெர்கின்ஸ் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். அஷ்வின், ஜகாதி சுழலில் தலா ஒரு சிக்சர் அடித்தார் பெர்கின்ஸ். ஜகாதி பந்தில் பெர்கின்ஸ்(34) வெளியேறினார். சகாவின் துல்லிய 'த்ரோவில் சிம்மன்ஸ்(20) ரன் அவுட்டானார். அடுத்து வந்த டேரன் பிராவோ(1), டேரன் கங்கா(8), ராம்தின்(3) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய பரத், 23 ரன்களுக்கு போலிஞ்சர் பந்தில் போல்டானார்.கடைசி கட்டத்தில் கெவான் கூப்பர் அதிரடியாக ரன் சேர்த்தார். போலிஞ்சர், டுவைன் பிராவோ பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டார். 10 பந்தில் 28 ரன்கள் விளாசிய இவர், போலிஞ்சர் வேகத்தில் வீழ்ந்தார். கடைசி 5 ஓவரில் 49 ரன்கள் எடுக்கப்பட்டன. டிரினிடாட் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது.சென்னை சார்பில் போலிஞ்சர் 3, ஜகாதி 2 விக்கெட் வீழ்த்தினர்.
விக்கெட் மடமட:
6 பந்தில் 27 ரன்கள்:
வாய்ப்பு எப்படி?:
ஜகாதி காயம்
தோனி படுமந்தம்


