/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கிடப்பில் உள்ள பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் : 18 வது வார்டு தி.மு.க., வேட்பாளர்கிடப்பில் உள்ள பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் : 18 வது வார்டு தி.மு.க., வேட்பாளர்
கிடப்பில் உள்ள பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் : 18 வது வார்டு தி.மு.க., வேட்பாளர்
கிடப்பில் உள்ள பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் : 18 வது வார்டு தி.மு.க., வேட்பாளர்
கிடப்பில் உள்ள பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் : 18 வது வார்டு தி.மு.க., வேட்பாளர்
ADDED : அக் 03, 2011 12:22 AM
சிவகங்கை : ''நான் வெற்றி பெற்றால், கிடப்பில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தை விரைவுபடுத்துவேன்,'' என, 18வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பில் போட்டியிடும் ஆர்.
ராஜன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நான் வெற்றி பெற்றால், வார்டில் கிடப்பில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க செய்வேன். சாஸ்திரி தெரு, வேலாயுதசுவாமி கோயில் தெரு, ராஜாஜி தெரு உள்ளிட்ட தெரு மக்களுக்கு தினமும் குடிநீர் கிடைக்க பாடுபடுவேன். வார்டில் இன்னும் முழுமையடையாமல் உள்ள தெருக்களில் ரோடு வசதி செய்துதருவேன். தினமும் வார்டு மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறித்து உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். தெருவிளக்குகளை முறையாக பராமரிக்க நகராட்சி நிர்வாகத்தினரை வலியுறுத்தி, அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க பாடுபடுவேன் என்றார். முன்னாள் நகராட்சி தலைவர் சாத்தையா, முன்னாள் கவுன்சிலர் சோமசுந்தரம், ராமசுப்பு பங்கேற்றனர்.


