உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி., மாற்றம்
உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி., மாற்றம்
உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி., மாற்றம்
ADDED : செப் 29, 2011 09:44 PM
சென்னை : உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த ராஜேந்திரன் மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், சென்னை மாநகர கமிஷனராக இருந்தவர் டி.ராஜேந்திரன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற அன்றே, கமிஷனராக இருந்த ராஜேந்திரனை சிறைத் துறைக்கு மாற்றி, சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த திரிபாதியை சென்னை மாநகர கமிஷனராக நியமித்தார்.
தொடர்ந்து, இரண்டே நாட்களில், தமிழக போலீசின் மிக முக்கிய பதவியான உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அப்பதவியில் இருந்து ராஜேந்திரன், திடீரென நேற்று மாற்றப்பட்டார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் புதிதாக உருவாக்கப்பட்ட இணை கமிஷனர் பதவிக்கு நியமிக்கப்பட்ட, டி.ஐ.ஜி., பொன் மாணிக்கவேலு மாற்றப்பட்டு, உளவுப் பிரிவு டி.ஐ.ஜி., -1 ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, உளவுப் பிரிவு டி.ஐ.ஜி.,யாக உள்ள சத்தியமூர்த்தி, டி.ஐ.ஜி., -2 ஆக பதவி வகிப்பார் எனத் தெரிகிறது.