Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பரமக்குடி கலவரம் குறித்து நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம்

பரமக்குடி கலவரம் குறித்து நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம்

பரமக்குடி கலவரம் குறித்து நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம்

பரமக்குடி கலவரம் குறித்து நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம்

ADDED : செப் 28, 2011 11:49 PM


Google News

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத்திடம், பாதிக்கப்பட்டோர் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.

பரமக்குடியில் செப்.,11ல் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் கலவரம் ஏற்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் பலியாயினர். போலீசார் உட்பட பொது மக்கள் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. நேற்று முன்தினம் நீதிபதி சம்பத், கலவரம் நடந்த பகுதிகளை பார்வையிட்டார். பின் கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரித்தார். அப்போது பிறரை அருகில் கூட அனுமதிக்கவில்லை. நேற்று ராமநாதபுரத்தில் காயமடைந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினார். இதன்பின் மதுரையில் சிகிச்சை பெற்று வரும் துணை கமிஷனர் செந்தில்வேலனிடம் விசாரணை செய்தபின் சென்னை திரும்பினார். பாதித்தோர் அளித்த வாக்குமூலம் விபரங்களை, இவர் வெளியிடவில்லை.

நீதிபதி சம்பத் கூறியதாவது: விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்கள் தரப்பில் கூறியதை கேட்டறிந்தேன். விசாரணை நியாயமானதாகவும், நேர்மையாகவும், விறுப்பு வெறுப்பின்றி நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட இரண்டு மாதத்திற்கு முன்பாக விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us