/உள்ளூர் செய்திகள்/திருச்சி/லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் பலிலோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
ADDED : செப் 28, 2011 11:44 PM
மணப்பாறை: மணப்பாறை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் பலியானார்.
மணப்பாறை தாலுகா புத்தாநத்தத்தில் இருந்து கடந்த திங்கள் கிழமை காலை ஒன்பது மணிக்கு ஒரு டாடா யேஸ் என்ற லோடு ஆட்டோ காய்கறி ஏற்றுவதற்காக மணப்பாறைக்கு வந்து கொண்டிருந்தது. வரும் வழியில் ஆங்காங்கே பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்த கட்டிட கூலித்தொழிலாளர்களையும், ஆட்டோ டிரைவர் சக்திவேல்(20) வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். பொய்கைமலை வளைவில் வண்டி வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் வந்த 17 பேர் படுகாயமடைந்து மணப்பாறை, திருச்சி அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வலையபட்டியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ரெஜினாமேரி(50) நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து மணப்பாறை எஸ்.ஐ., அரங்கநாதன் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்.


