/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு தமிழக அரசு கெடுகேபிள் ஆப்ரேட்டர்களுக்கு தமிழக அரசு கெடு
கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு தமிழக அரசு கெடு
கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு தமிழக அரசு கெடு
கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு தமிழக அரசு கெடு
ADDED : செப் 28, 2011 11:40 PM
சிவகங்கை : கேபிள் 'டிவி' ஆப்ரேட்டர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய இணைப்பு கட்டணத்தை கட்ட கெடு விதித்துள்ளது.செப்.,2 முதல் அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தை தமிழக அரசு துவக்கியது.
இதில் கட்டண சானல்கள் உட்பட 90 சானல்கள் ஒளிபரப்பபடுகின்றன. தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தில் சேர்ந்துள்ள 'கேபிள் டிவி' ஆப்ரேட்டர்கள் மூலம் தொலைக்காட்சி சேவை பெறும் சந்தாதாரர்களிடம் இருந்து மாதச் சந்தாவாக பெறப்படும் ரூ.70ல் ஆப்ரேட்டர்கள் ஒரு இணைப்பிற்கு ரூபாய் 20, மற்றும் சேவை வரிகள், வங்கி சேவை கட்டணங்களை ஒவ்வொரு மாதம் முடிந்ததும் மறு மாதம் செலுத்த வேண்டும். இதில் தாங்கள் பதிவு செய்துள்ள சந்தாதாரர்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாத சந்தாவையும் ஒளிபரப்பு செய்த மறு மாதம் 10ம் தேதிக்குள் கட்டாயம் செலுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் அந்த ஆப்ரேட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.கேபிள் ஆப்ரேட்டர்கள் மாத கட்டணத்தை என்ரோல்மென்ட் நம்பரை பதிவு செய்து, வங்கிகள், இன்டர்நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கேபிள் ஆப்ரேட்டர் ஒருவர் கூறுகையில், '' அரசு, தனியார் வேலை என பலர் உள்ளதால் கேபிள் இணைப்பிற்கு மாதச் சந்தாவை10 ம்தேதிக்கு மேல் தான் பெற முடியும். அரசு 10 ம்தேதிக்குள் கட்டவேண்டும் என நிபந்தனை விதிக்கிறது. இதில் சேவை வரி, வங்கி சேவை கட்டணத்துடன் கட்டுவதால் கூடுதல் செலவாகிறது,'' என்றார்.


