UPDATED : செப் 28, 2011 09:00 AM
ADDED : செப் 28, 2011 07:45 AM

திருச்சி: காத்மாண்டு விமான விபத்தில் உயிரிழந்த திருச்சியை சேர்ந்த 8 பேரின் உடல் இன்று காலை 7 மணியளவில் திருச்சி வந்தது.
சத்திரம் பஸ்டாண்ட் அருகே உள்ள தேசிய கல்லூரி மைதானத்தில் அவர்களது உடல் இறுதி அஞ்சலி செலுத்த பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.