அ.தி.மு.க., கவுன்சிலர்சுயேட்சையாக மனு
அ.தி.மு.க., கவுன்சிலர்சுயேட்சையாக மனு
அ.தி.மு.க., கவுன்சிலர்சுயேட்சையாக மனு
ADDED : செப் 28, 2011 12:48 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி தேர்தலில் 35வது வார்டில், 'சீட்' கிடைக்காத
அதிருப்தியில், அ.தி.மு.க., சிட்டிங் கவுன்சிலர் சுயேட்சையாக
களமிறங்கியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு மாநகராட்சி 35வது வார்டு அ.தி.மு.க.,
வேட்பாளராக சூரம்பட்டி நகரச் செயலாளர் ஜெகதீசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வார்டில் பத்தாண்டாக சூரம்பட்டி நகர இளைஞரணி செயலாளர் தங்கவேல்
கவுன்சிலராக உள்ளார். மீண்டும் 'சீட்' கேட்டு விண்ணப்பித்தார். சீட்
கிடைக்காததால், தங்கவேல் நேற்று 35வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட
வேட்புமனுத்தாக்கல் செய்தார்.அவர் கூறியதாவது:வார்டில் 10 ஆண்டாக சிறப்பாக
செயல்பட்டு மக்களிடம் நற்பெயர் பெற்றுள்ளேன். சூரம்பட்டி நகரச் செயலாளர்
எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவிடாமல் செய்து, அவருக்கு சம்பந்தமில்லாத,
எனது வார்டிலேயே போட்டியிடுகிறார். அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த
போது, 400 ஓட்டுகள் வித்தியாசத்தில் கடந்த முறை வெற்றிபெற்றேன்.
இம்முறையும் மக்கள் ஆதரவுடன் வெற்றிபெற்று அ.தி.மு.க.,வில்
நீடிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.