/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மஞ்சள் வியாபாரி கொலை; 4 மாணவர்கள் கைதுமஞ்சள் வியாபாரி கொலை; 4 மாணவர்கள் கைது
மஞ்சள் வியாபாரி கொலை; 4 மாணவர்கள் கைது
மஞ்சள் வியாபாரி கொலை; 4 மாணவர்கள் கைது
மஞ்சள் வியாபாரி கொலை; 4 மாணவர்கள் கைது
ADDED : செப் 28, 2011 12:48 AM
ஈரோடு: மஞ்சள் வியாபாரி கொலை வழக்கில் நான்கு கல்லூரி மாணவர்கள் உட்பட ஆறுபேரை மலையம்பாளையம் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
ஊஞ்சலூர், குமாரசாமி கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன்(47);
குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார். ஈரோட்டில் கே.பி.எம்., என்ற
பெயரில் மஞ்சள் மண்டி வைத்துள்ளார். கோவை கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல்
கல்லூரி இணைச் செயலாளராக இருந்து வந்தார்.
இவருக்கு சொந்தமான விவசாய பூமி கொடுமுடி அருகே கவுண்டன்பாளையத்தில் உள்ளது.
நிலத்தை பார்க்க வாரம் ஒருமுறை தனது சொந்த ஊருக்கு இளங்கோவன் வருவார்.
24ம் தேதி, இளங்கோவன் தனது நண்பர்களுடன் தனது பண்ணை வீட்டுக்கு வந்தார்.
செப்., 25ம் தேதி மன்னாதம்பாளையம் காலிங்கராயன் வாய்க்கால் அருகே மர்மமான
முறையில் இறந்து கிடந்தார்.மலையம்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி, கல்லூரி
மாணவர்கள் நான்கு பேர் உள்பட ஆறு பேரை நேற்று கைது செய்தனர்.
மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் கண்ணன் கூறியதாவது:இளங்கோவன் எல்லோரிடமும்
சகஜமாக பழகுபவர். இவருக்கும், மஹாராஜா கல்லூரி மாணவன் லோகேஷுக்கும் (19),
பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலம், அதே கல்லூரியை சேர்ந்த ராபின்சன்(21),
ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மாணவன் சங்கர் (19), நந்தா கலை அறிவியல்
கல்லூரி மாணவன் பிரசன்னா(20), பெயின்டர்கள் முகமது தாரிப்(20),
பெரியசாமி(21) ஆகிய ஐந்து பேர் அறிமுகமாகினர்.
இவர்களுக்கு கல்வி கற்க பண
உதவி செய்வதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, 24ம் தேதி இளங்கோவனுக்கும், ஆறுபேருக்கும் தகராறு ஏற்பட்டது.
தகராறில், இளங்கோவனை ஆறு பேரும் கூட்டாக சேர்ந்து கொலை செய்துள்ளனர்.
கொலையை மறைக்க இளங்கோவனின் உடலை, அவரது கார் மூலம் கொண்டு சென்று,
வாய்க்காலில் வீசியுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் மொபெட்டை
பறிமுதல் செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.