Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மகாளய அமாவாசயை முன்னிட்டு குற்றாலத்தில் பத்ரு வழிபாடு

மகாளய அமாவாசயை முன்னிட்டு குற்றாலத்தில் பத்ரு வழிபாடு

மகாளய அமாவாசயை முன்னிட்டு குற்றாலத்தில் பத்ரு வழிபாடு

மகாளய அமாவாசயை முன்னிட்டு குற்றாலத்தில் பத்ரு வழிபாடு

ADDED : செப் 28, 2011 12:42 AM


Google News

குற்றாலம் : மகாளய அமாவாசையை முன்னிட்டு குற்றாலத்தில் நேற்று காலை ஏராளமான பக்தர்கள் நீராடி தனது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசயை மகாளய அமாவாசை என அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அமாவாசை தோறும் தனது முன்னோர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள் மகாளய அமாவசையில் திதி கொடுத்தால் அந்த ஆண்டு முழுவதும் திதி கொடுத்ததிற்கு ஈடாகும் என்பது நம்பிக்கை. அதன்படி புரட்டாசி மகாளய அமாவாசையான நேற்று குற்றாலத்தில் அருவிக்கரை படித்துறையில் அதிகாலை 5மணி முதல் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அங்கு அவர்கள் புரோகிதர்களைக் கொண்டு தனது பித்ருகளுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு திதி கொடுத்தனர்.



திதியின்போது புரோகிதர்களுக்கு வாழைஇலை, பச்சரிசி, காய்கனிகள், அகத்தீகீரை, குருதட்சனை ஆகியவற்றை புரோகிதர்களிடம் கொடுத்து மந்திரம் ஓதி எள்ளு,தண்ணீர் இறைத்து காசி...காசி.. என்று கூறி சடங்கு வழிபாடுகளை நிறைவேற்றினர். இதேபோல் மகாளய அமாவாசயை முன்னிட்டு பாபநாசம் தாமிபரணி தீர்த்தகரை மண்டபத்திலும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தனது முன்னோர்களுக்கு பித்ரு வழிபாடு சடங்கு முறைகள் நிறைவேற்றினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us