/உள்ளூர் செய்திகள்/கரூர்/குளித்தலையில் மின்மயானம் பொதுமக்கள் கோரிக்கைகுளித்தலையில் மின்மயானம் பொதுமக்கள் கோரிக்கை
குளித்தலையில் மின்மயானம் பொதுமக்கள் கோரிக்கை
குளித்தலையில் மின்மயானம் பொதுமக்கள் கோரிக்கை
குளித்தலையில் மின்மயானம் பொதுமக்கள் கோரிக்கை
ADDED : செப் 27, 2011 12:03 AM
குளித்தலை: 'குளித்தலையில் மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் முக்கிய நகரமாக குளித்தலை நகரம் வளர்ந்து வருகறது. குளித்தலை காவிரியாற்று படுகையில் 25க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கடம்பர் கோவில், பெரிய பாலம், சுங்ககேட் பாலம் ஆகிய பகுதிகளில் உள்ள சுடுகாட்டில் இறந்தவர்களை உடல்கள் எரிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக ஜாதி அடிப்படையில் பிரேதம் எரிப்பதற்கு சுடுகாடு அமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சுடுகாட்டில் இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கு அதிக செலவு மற்றும் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை எரிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. 'வளர்ந்து வரும் நகரமான குளித்தலை காவிரி படுகையில் இறந்தவர்களின் உடலை எரிக்க மின் மயானம் அமைக்க எம்.எல்.ஏ., பாப்பாசுந்தரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என எதிர்பார்க்கின்றனர்.