/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நகராட்சி மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் மக்கள் அவதிநகராட்சி மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் மக்கள் அவதி
நகராட்சி மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் மக்கள் அவதி
நகராட்சி மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் மக்கள் அவதி
நகராட்சி மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் மக்கள் அவதி
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
டாக்டர் இல்லாத பிற சமயங்களில் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நெல்லிக்குப்பம் பகுதியில் அதிகளவு ஏழை விவசாய கூலித் தொழிலாளிகளே வசிக்கின்றனர். 24 மணி நேரம் நகராட்சி மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் நோயாளிகள் அவசரத்திற்கு சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. நேற்று காலை விஷப் பூச்சி கடித்து உயிருக்குப் போராடிய நெல்லிக்குப்பம் அண்ணா நகரைச் சேர்ந்த நாகப்பன் என்பவரை நகராட்சி மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது மருத்துவமனை பூட்டியிருந்தது. காலை 7.30 மணிக்கு திறக்கப்பட வேண்டிய மருத்துவமனை நேரத்திற்கு திறக்கப்படாததாலும், டாக்டர், நர்ஸ் இல்லாததாலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர் உடன் ஆட்டோ மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். க்கள் நலன் கருதி 24 மணி நேரமும் இயங்கும் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.