/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஊராட்சி வார்டுகளில் போட்டியிட பெரும்பாலோனோர் ஆர்வம்ஊராட்சி வார்டுகளில் போட்டியிட பெரும்பாலோனோர் ஆர்வம்
ஊராட்சி வார்டுகளில் போட்டியிட பெரும்பாலோனோர் ஆர்வம்
ஊராட்சி வார்டுகளில் போட்டியிட பெரும்பாலோனோர் ஆர்வம்
ஊராட்சி வார்டுகளில் போட்டியிட பெரும்பாலோனோர் ஆர்வம்
ADDED : செப் 25, 2011 10:05 PM
சின்னாளபட்டி:கிராம ஊராட்சிகளில் புதிய வார்டு சீரமைப்பால் போட்டியாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள் ளது. ஒவ்வொரு வார்டிலும் குறைந்தபட்சமாக 300 வாக்காளர்கள் உள்ளதால் எளிதில் சந்தித்து ஓட்டுக்கேட்க ஏதுவாகவும் உள்ளது.கடந்த உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிட்ட ஒரு ஊராட்சி வார்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒருவர் உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதற்கு அதிக ஓட்டுக்கள் தேவைப்பட்டன. தற்போது புதிய சீரமைப்பு முறைப்படி, ஊராட்சிகளில் உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்காமல், வார்டுகள் எண்ணிக்கை மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறிப்பிட்ட ஒரு வார்டில் வாக்காளர் எண்ணிக்கை மிகவும் குறைவாகியுள்ளது. ஆயிரம் வாக்காளர்களை இருந்த ஒரு வார்டு தற்போது சராசரியாக 300 வாக்காளர்களை கொண்ட 3 வார்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதனால் வார்டு உறுப்பினருக்கு போட்டியிடுபவர்கள் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினால் போதுமானது.இதனால், கிராமப்புறங்களில் பலருக்கும் மக்கள் பிரதிநிதியாக அதிகளவில் ஆர்வமும், ஆசையும் வந்து விட்டது. ஒரு வார்டில் போட்டியிடுபவர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, 50 ஓட்டுக்கள் 100 ஓட்டுக்கள் வாங்கினாலே உறுப்பினர் ஆகிவிடமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஓட்டுக்களை தங்கள் உறவினர்கள் மூலமே பெற்றுவிடாலம் என்ற நம்பிக்கையும் போட்டியிடுபவர்கள் மத்தியில் உள்ளது. இதனால் மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சி வார்டுகளுக்கு போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.