/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தமிழக உளவு அதிகாரிகளுக்கு "பயங்கரவாத தேர்வு : முதலிடம் பிடித்தார் கோவை உதவி கமிஷனர்:தமிழக உளவு அதிகாரிகளுக்கு "பயங்கரவாத தேர்வு : முதலிடம் பிடித்தார் கோவை உதவி கமிஷனர்:
தமிழக உளவு அதிகாரிகளுக்கு "பயங்கரவாத தேர்வு : முதலிடம் பிடித்தார் கோவை உதவி கமிஷனர்:
தமிழக உளவு அதிகாரிகளுக்கு "பயங்கரவாத தேர்வு : முதலிடம் பிடித்தார் கோவை உதவி கமிஷனர்:
தமிழக உளவு அதிகாரிகளுக்கு "பயங்கரவாத தேர்வு : முதலிடம் பிடித்தார் கோவை உதவி கமிஷனர்:
ADDED : செப் 25, 2011 01:16 AM
கோவை :'பயங்கரவாதமும், தடுக்கும் வழிமுறைகளும்' என்ற தலைப்பில் நடந்த மாநில அளவிலான பயிற்சித் தேர்வில், கோவை மாநகர போலீசில் பணியாற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (எஸ்.ஐ.சி.,) உதவி கமிஷனர் ராமமூர்த்தி முதலிடம் பெற்றார்.சர்வதேச மற்றும் உள்நாட்டு பயங்கரவாத இயக்கங்களின் வெடிகுண்டு தாக்குதல்களும், மாவோயிஸ்ட்களின் ஆதிக்கமும் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.
இவர்களது சதித்திட்டத்தை முன்கூட்டியே கண்காணித்து உளவுத்தகவல்கள் மூலமாக மாநில அரசுகளை உஷார்படுத்துவது, உளவு ஏஜன்சிகளுக்கு சவாலாக மாறியுள்ளது. இதனால், மத்திய உள்துறையின் கீழ் செயல்படும் மத்திய புலனாய்வுத் துறையில் பணியாற்றுவோருக்கு அவ்வப்போது பயங்கரவாத முறியடிப்பு உளவுத்தகவல் சேகரிப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.அதேபோன்று, மாநிலங் களில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் உளவுப் போலீசார் சர்வதேச மற்றும் உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகள், மாவோயிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடு தொடர்பான விபரங்களை அறியும் வகையில் உளவுப்பணி சார்ந்த பயிற்சிகள், அறிவுத்திறனை பரிசோதிக்கும் எழுத்துத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்படி தமிழகத்தில் பணியாற்றும் பல்வேறு உளவு அமைப்புகளைச் சேர்ந்த போலீசாருக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் சென்னையிலுள்ள செக்யூரிட்டி பிராஞ்ச் பயிற்சி மையத்தில் நடந்தது.'பயங்கரவாதமும், தடுக்கும் வழிமுறைகளும்' என்ற தலைப்பில் நடந்த எழுத்துத் தேர்வில் மாநிலம் முழுவதும் இருந்து எஸ்.ஐ.யூ., (ஸ்பெஷல் இன்டலிஜென்ஸ் யூனிட்), எஸ்.பி. சி.ஐ.டி., (தனிப்பிரிவு), மாவட்டங்கள் மற்றும் மாநகர போலீசில் செயல்படும் ஸ்பெஷல் பிராஞ்ச், இன்டலிஜென்ஸ் செக்ஷன் உள்ளிட்ட உளவுப்பிரிவுகளைச் சேர்ந்த 60 டி.எஸ்.பி., கள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை (உலக வர்த்தக மைய கட்டடங்கள்) பயணிகள் விமானங்கள் மூலம் தகர்த்த 'அல்-கொய்தா' சர்வதேச பயங்கரவாத அமைப்பு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி வரும் 'இந்தியன் முஜாகிதீன்' உள்ளிட்ட அமைப்புகள், வடகிழக்கு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாவோயிஸ்ட்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. மேலும், பயங்கரவாத செயல்களை முறியடிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் உளவுத்தகவல் சேகரிப்பு குறித்த கேள்விகளும் இடம்பெற்றிருந்தன. இத்தேர்வில் கோவை மாநகர போலீஸ் சார்பில் பங்கேற்ற சிறப்பு புலனாய்வுப் பிரிவு ( எஸ்.ஐ.சி.,) உதவி கமிஷனர் ராமமூர்த்தி முதலிடம் பெற்றார். அவருக்கு 'செக்யூரிட்டி பிராஞ்ச் சி.ஐ.டி., பயிற்சி மையம்' சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட சான்றிதழை வழங்கி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி பாராட்டு தெரிவித்தார்.