/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ரேஷன் கார்டில் பெயர் நீக்கல் சேர்த்தல் இனி சுலபமில்லைரேஷன் கார்டில் பெயர் நீக்கல் சேர்த்தல் இனி சுலபமில்லை
ரேஷன் கார்டில் பெயர் நீக்கல் சேர்த்தல் இனி சுலபமில்லை
ரேஷன் கார்டில் பெயர் நீக்கல் சேர்த்தல் இனி சுலபமில்லை
ரேஷன் கார்டில் பெயர் நீக்கல் சேர்த்தல் இனி சுலபமில்லை
ADDED : செப் 23, 2011 11:28 PM
ராமநாதபுரம் : ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் இனி
சுலபமில்லை.தமிழகத்தில் மக்கள் தொகையை காட்டிலும், ரேஷன்கார்டில்
உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
போலி கார்டுகள் குறித்து மாவட்ட
வழங்கல் அலுவலர்கள் நேரடியாக சென்று விசாரித்து, போலி கார்டுகளை களைய
உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே வீட்டில் வசித்து வருபவர்கள், குடும்பத்துக்கு
இரண்டுக்கும் மேற்பட்ட கார்டுகள் பெற்று வருகின்றனர். வழங்கல் துறை
அதிகாரிகளால், இதை கட்டுப்படுத்தவே முடியவில்லை. தற்போது புதிய
கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள கார்டுகளை
கொடுத்த பிறகே, புதிய கார்டுக்குரிய விண்ணப்பம் வழங்க
உத்தரவிடப்பட்டுள்ளது. பெயர் சேர்த்தல், நீக்கலில் சரியான ஆதாரங்கள்
இருந்தால், தாசில்தார் நிறைவேற்றி கொடுத்து வந்தார். இந்நிலையில் இனி
பெயர், சேர்க்கவோ, நீக்கவோ வேண்டுமானால் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள
கார்டுதாரரின் வீட்டிற்கு, ஆர்.ஐ., சென்று நேரில் விசாரித்த பிறகே பெயர்
நீக்கவோ, சேர்க்கவோ முடியும். இதனால் போலி கார்டுகள் களையப்படும், என
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.