/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஊராட்சி பதவிகளுக்கான வேட்புமனுக்கள் போதவில்லை : துவக்கமே சுறுசுறுப்பு; விறுவிறுப்புஊராட்சி பதவிகளுக்கான வேட்புமனுக்கள் போதவில்லை : துவக்கமே சுறுசுறுப்பு; விறுவிறுப்பு
ஊராட்சி பதவிகளுக்கான வேட்புமனுக்கள் போதவில்லை : துவக்கமே சுறுசுறுப்பு; விறுவிறுப்பு
ஊராட்சி பதவிகளுக்கான வேட்புமனுக்கள் போதவில்லை : துவக்கமே சுறுசுறுப்பு; விறுவிறுப்பு
ஊராட்சி பதவிகளுக்கான வேட்புமனுக்கள் போதவில்லை : துவக்கமே சுறுசுறுப்பு; விறுவிறுப்பு
ADDED : செப் 23, 2011 10:50 PM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான
மனுத்தாக்கல் துவங்கிய முதல் நாளே, களம் சூடுபிடித்துள்ளது.
மனுத்தாக்கல்
செய்வதற்குரிய விண்ணப்பத்தை ஊராட்சி அலுவலகங்களில் ஏராளமானோர்
பெற்றுச்சென்றனர். பல இடங்களில் விண்ணப்பங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டுவதை விட, அரசியல்
சாராமல் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் ஊராட்சி தலைவர், ஊராட்சி
உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. கிராமத்தினரிடம் நேரடியாக
தொடர்பு உள்ள இப்பதவிகளில் போட்டியிட, அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
துவக்கமே ஜோர்: மனுத்தாக்கல் துவங்கிய நேற்று முன்தினம், ஊராட்சி
அலுவலகங்களுக்கு சென்று, வேட்புமனு விண்ணப்பங்களை ஏராளமானோர்
பெற்றுச்சென்றனர். திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம்
ஊராட்சியில் மட்டும், ஒரே நாளில் 70 விண்ணப்பங்கள் வாங்கிச்சென்றனர். இங்கு
விண்ணப்பம் தட்டுப்பாடு ஏற்பட்டதால், தொடர்ந்து வழங்க முடியாத நிலை
ஏற்பட்டது. விண்ணப்பங்கள் வாங்கிச்சென்றவர், தங்களுக்கு முன்மொழிய ஆட்களை
தேர்வு செய்வது, வாக்காளர்பட்டியலில் பகுதி எண், வார்டு எண் ஆகியவற்றை
சரிபார்ப்பது, ஊராட்சியிலுள்ள நிலுவை வரி தொகையை செலுத்துவது என,
சுறுசுறுப்பாக உள்ளனர். இவற்றை முடித்துவிட்டு, ஆதரவாளர் புடை சூழ
மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். செப்., 29 வரை கிராம ஊராட்சி அலுவகங்களில்
தேர்தல் திருவிழா களைகட்டியிருக்கும். சுயேச்சை: மாவட்ட, ஒன்றிய
கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சைகள் அதிக ஆர்வம் காட்டவில்லை. கட்சிகள் இதுவரை
வேட்பாளரை அறிவிக்காததால், இப்பதவிகளுக்கு மனுத்தாக்கல், கடைசி நாளில்
தான் களை கட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.