ADDED : செப் 23, 2011 01:04 AM
விருதுநகர் : விருதுநகரில் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு நடந்த விரைவு சைக்கிள் போட்டியில் கே.வி.எஸ்., பள்ளி மாணவர் ஜி.ராம்ராஜ் முதலிடம் பெற்றார்.
அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் விரைவு சைக்கிள் போட்டி நடந்தது. பெண்கள் பிரிவு 13 வயதிற்குட்பட்டோரில் ஸ்ரீவி.லயன்ஸ் மெட்ரிக்., பள்ளி மாணவி ஜி.சுவாதிபாலா முதலிடம், கே.தனவதனி 2ம் இடம், பாலவநத்தம் அரசுப்பள்ளி மாணவி எஸ்.மல்லிகா 3 ம் இடம் பெற்றனர்.15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பாலையம்பட்டி பி.பி.வி. சாலா பள்ளி மாணவி எ.ராஜலட்சுமிமுதலிடம், சங்கரலிங்காபுரம் அரசு பள்ளி மாணவி சங்கரேஸ்வரி 2ம் இடம், விருதுநகர் டி.பி.என்.எம்., பள்ளி மாணவி ஆர்.யோகலட்சுமி 3ம் இடம், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் விருதுநகர் டி.பி.என்.எம்., பள்ளி மாணவி சி.முருகேஸ்வரிமுதலிடம், சத்திரிய மகளிர் பள்ளி மாணவி என்.முருகேஸ்வரி 2ம் இடம், டி.பி.என்.எம்.,பள்ளி மாணவி என்.பிரியா 3 ம் இடம் பெற்றனர் .ஆண்கள் 13 வயதிற்குட்பட்டோர் பிரிவில் விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளி எஸ்.சரத்குமார் மாணவர் முதலிடம், இதே பள்ளி மாணவர் டி.பாலகணேஷ் 2ம் இடம், வி.எம்.ஜி.ஆர்.ஆர்., மெட்ரிக்., பள்ளிமாணவர் எம்.நீதிக்குமார் 3ம் இடம் பெற்றனர்.
15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஸ்ரீவி., லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் ஜி.பாரத் கண்ணன் முதலிடம், விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளி மாணவர் என்.அட்சய்குமார் 2ம் இடம், ஸ்ரீவி., லயன்ஸ் மெட்ரிக்., பள்ளி மாணவர் ஸ்ரீதரன் 3ம் இடம், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளி மாணவர் ஜி.ராம்ராஜ் முதலிடம், இதே பள்ளி மாணவர் ஆர்.ராஜ்குமார் 2ம் இடம், ஸ்ரீவி., லயன்ஸ் பள்ளி மாணவர் எஸ்.ஆகாஸ் 3ம் இடம் பெற்றனர்.