Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கட்சி தொண்டர்களை "நனைக்க' சரக்கு முன்பதிவு

கட்சி தொண்டர்களை "நனைக்க' சரக்கு முன்பதிவு

கட்சி தொண்டர்களை "நனைக்க' சரக்கு முன்பதிவு

கட்சி தொண்டர்களை "நனைக்க' சரக்கு முன்பதிவு

ADDED : செப் 22, 2011 02:11 AM


Google News
ஈரோடு: உள்ளாச்சி தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், மதுக்கடைகளில் முன்கூட்டியே சரக்கு வாங்க முன்பதிவு செய்து வருகின்றனர்.உள்ளாட்சி தேர்தல் தேதியை, மாநில தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அ.தி.மு.க., அறிவித்து வருகிறது. தி.மு.க.,வில் மாவட்ட அளவில் நேர்காணல் முடிந்துள்ளது. மற்ற கட்சிகளும் இப்பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.சட்டசபை தேர்தலின் போது, கடுமையான விதிமுறைகளை தேர்தல் கமிஷன் பின்பற்றியது.

இதனால், தெருத் தெருவாக மேற்கொள்ளும் பிரசாரத்தை தவிர, வேறு எந்த வகையிலும் தங்களை விளம்பரப்படுத்த முடியாத நிலை, வேட்பாளர்களுக்கு ஏற்பட்டது.வேட்பாளர்கள் சிலர் மறைமுகமாக ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் வார்டில் இருக்கும் ஓட்டு வங்கியை தக்கவைத்துக் கொள்ள வேட்பாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் ஏராளமான வேட்பாளர்கள் களத்தில் மோதுவர் என்பதால், தங்களுடன் எப்போதும் தொண்டர்களை வைத்துக்கொண்டு, வார்டுகளில் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டியுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் தொண்டர்களுக்கு, வேட்பாளர்கள் அசைவ உணவுடன், மதுவும் வழங்குவது வழக்கம். இதற்காக தேர்தலுக்கு முன்கூட்டியே டாஸ்மாக் மதுக்கடைகளில், வேட்பாளர்கள் சரக்கு புக்கிங் செய்து வருகின்றனர். சிலர் ஒட்டுமொத்தமாக சரக்குகளை வாங்கி வீட்டிலும், கட்சி அலுவலகத்திலும் இருப்பு வைக்க துவங்கி உள்ளனர்.டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கூறுகையில், 'தேர்தலின் போது, பெரும்பாலும் சுவர்களுக்குதான் அரசியல் கட்சியினர் முன்பதிவு செய்வர். அதற்கு தேர்தல் கமிஷன் கிடுக்கி பிடி விதித்துள்ளது. தற்போது, உள்ளாட்சி தேர்தலுக்கு முன்கூட்டியே கட்சியினர் சிலர் மது வகைகளுக்கும் முன் பதிவு செய்து, வாங்கி குவிக்கின்றனர்.

டாஸ்மாக் கடைகளில் சில்லரையாக மது வகைகள் வாங்கி கொடுப்பதால், பாட்டிலுக்கு 10 ரூபாய் வரை கூடுதல் செலவாகிறது.ஒட்டுமொத்தமாக சரக்குகளை வாங்கி, பாதுகாப்பான இடங்களில் பதுக்கி வைப்பதால், வேட்பாளர்களுக்கு தினசரி செலவாகும் பணத்தை மிச்சமாகும்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us