ப்ளஸ் 2 வகுப்புதனித்தேர்வு ஆரம்பம்
ப்ளஸ் 2 வகுப்புதனித்தேர்வு ஆரம்பம்
ப்ளஸ் 2 வகுப்புதனித்தேர்வு ஆரம்பம்
ADDED : செப் 22, 2011 02:11 AM
ஈரோடு: ஈரோடு கொல்லம்பாளையம் நகரவை மேல்நிலைப் பள்ளியில், ப்ளஸ் 2
தனித்தேர்வு நேற்று துவங்கியது.தமிழகம் முழுவதுமாக ப்ளஸ் 2 தனித்தேர்வு
நேற்று துவங்கி, அக்டோபர் 1ம் தேதி வரை நடக்கிறது.
சென்றாண்டு ப்ளஸ் 2
பொதுத்தேர்வில் தவறியவர்கள் மற்றும் நேரடியாக, டூடோரியல் கல்லூரிகள் மூலம்
விண்ணப்பித்தவர்கள், இத்தேர்வை எழுதினர்.ஈரோட்டில் ஒரே மையமான,
கொல்லம்பாளையம் நகரவை மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை தேர்வு நடந்தது.
முதல் நாளான நேற்று தமிழ் முதல்தாள் தேர்வை 90 பேர் எழுதினர். முதன்மை
கல்வி அதிகாரி குமார், பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகரன் ஆகியோர் ஆய்வு
செய்தனர். பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.