ADDED : செப் 22, 2011 02:11 AM
ஈரோடு: ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள, போலீஸார் மனமகிழ் மன்ற அறையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஃபோட்டோ வைத்துள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின், அரசு அலுவலகங்களில், முதல்வர்
ஜெயலலிதா ஃபோட்டோ வைக்கப்பட்டது. தி.மு.க., வசம் இருந்த உள்ளாட்சி
அலுவலகங்களில், முதல்வர் ஜெயலலிதா படத்தை மாட்ட, தி.மு.க.,வினர் எதிர்ப்பு
தெரிவித்தனர். இருந்த போதும், அ.தி.மு.க.,வினர் அதிரடியாக சென்று,
மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் முதல்வர் ஃபோட்டோவை மாட்டினர்.ஈரோடு
எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள போலீஸார் மனமகிழ் மன்ற அறையில், முன்னாள்
முதல்வர் கருணாநிதியின் ஆளுயர ஃபோட்டோ வைத்துள்ளனர்.


