Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டரின் சாட்சியத்தை விசாரிக்க ரூ.5 ஆயிரம்

வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டரின் சாட்சியத்தை விசாரிக்க ரூ.5 ஆயிரம்

வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டரின் சாட்சியத்தை விசாரிக்க ரூ.5 ஆயிரம்

வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டரின் சாட்சியத்தை விசாரிக்க ரூ.5 ஆயிரம்

ADDED : செப் 22, 2011 12:30 AM


Google News

மதுரை : மோசடி வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டரை சாட்சியாக விசாரிக்க வேண்டுமெனில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தில் அவர் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என அரசு தரப்புக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.கோவை நகைப்பட்டறை அதிபர் முருகவேல்.

இவரிடம் சிவகாசி ஜெயலட்சுமி, அவரது தந்தை அழகிரிசாமி, தம்பி சீனிவாசன், உறவினர்கள் நாராயணசாமி, அழகர்சாமி ஆகியோர் ரூ.மூன்றரை லட்சத்திற்கு நகைகளை வாங்கி மோசடி செய்ததாக புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மதுரை மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 5 ல் நடக்கிறது. இவ்வழக்கை விரைந்து முடிக்க ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டது. இவ்வழக்கில் அப்போதைய திடீர்நகர் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவரை சேர்க்காமல் இவ்வழக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மாஜிஸ்திரேட் (பொறுப்பு) கதிரவன் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் இளங்கோவனுக்கு இவ்வழக்கில் பல விஷயங்கள் தெரியும். அவரை சாட்சியாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என அரசு வக்கீல் உதயகுமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது மாஜிஸ்திரேட் (பொறுப்பு) கதிரவன் பிறப்பித்த உத்தரவு: ஒரு போலீஸ் அதிகாரி ஓய்வில் இருக்கும் போது தான் கோர்ட்டில் ஆஜராவார் என்பதை ஏற்கமுடியாது. கடந்த முறை இன்ஸ்பெக்டர் இளங்கோவனுக்கு அனுப்பபட்ட சம்மனை டி.எஸ்.பி., பெற்றுக்கொண்டார். இனக்கலவரப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர் ஈடுபட்டதால் அவர் செப்.,12 க்கு பின் வழக்கை ஒத்திவைக்க டி.எஸ்.பி., கோரினார். அதனடிப்படையில் இவ்வழக்கில் விசாரணை செப்., 13, 19, 20 ம் தேதிகளில் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அப்போதும் அவர் ஆஜராகவில்லை. இருப்பினும் நீதியின் நலன் கருதி குற்றமுறையீட்டாளர் (இன்ஸ்பெக்டர்) வரும் 23 ம் தேதிக்குள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தில் ரூ. 5 ஆயிரம் செலுத்தினால், அரசு வக்கீலின் மனு ஏற்றுக்கொள்ளப்படும். மீறினால் மனு தள்ளுபடி செய்யப்படும் என உத்தரவிட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us