Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மருத்துவ கல்லூரி கழிவுநீரை வெளியேற்ற ரூ.10 லட்சம் செலவில் புதிய திட்டம்

மருத்துவ கல்லூரி கழிவுநீரை வெளியேற்ற ரூ.10 லட்சம் செலவில் புதிய திட்டம்

மருத்துவ கல்லூரி கழிவுநீரை வெளியேற்ற ரூ.10 லட்சம் செலவில் புதிய திட்டம்

மருத்துவ கல்லூரி கழிவுநீரை வெளியேற்ற ரூ.10 லட்சம் செலவில் புதிய திட்டம்

ADDED : செப் 22, 2011 12:09 AM


Google News
தூத்துக்குடி : தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் கழிவு நீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு காணும் வகையில் 10 லட்சம் ரூபாய் செலவில் புதிய திட்டத்தை செயல்படுத்த கலெக்டர் ஆஷிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியின் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் சங்கத்தின் தலைவரும் மாவட்ட கலெக்டருமான ஆஷிஷ்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர ரத்தினம், உதவி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.வெள்ளைபாண்டி, உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர்.சைலஷ், மாநகராட்சி இன்ஜினியர் ராஜகோபால், பொதுப்பணித்துறை உதவி இன்ஜினியர் நல்லசிங், லயன்ஸ் கிளப் தலைவர் பொன்சீலன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், செவிலியர் கண்காணிப்பாளர்கள், துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட லயன்ஸ் கிளப் தலைவர் பொன்சீலன் ஆஸ்பத்திரி சலவை கூடத்தில் செயல்படாமல் உள்ள ஸ்டீம் இயந்திரத்தை தனது சொந்த செலவில் சரி செய்து வருவதாக கூறினார். மேலும் தொழிலதிபர்கள், சங்கங்கள் மூலம் நிதி திரட்டி தருவதாகவும் அதனை பாங்கில் முதலீடு செய்து அதில் இருந்து கிடைக்க கூடிய வட்டி மூலம் ஆஸ்பத்திரிக்கு தேவையான காவலர்களை நியமித்து கொள்ளலாம் என்றும் பொன்சீலன் கூறினார்.

ஆஸ்பத்திரியில் அடிக்கடி ஏற்பட்டு வரும் தண்ணீர் பிரச்னைக்கு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். மேலும் ஆஸ்பத்திரி கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் 10 லட்சம் ரூபாய் செலவில் ஒரு புதிய திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த திட்டத்தின் மூலம் கழிவு நீரை மார்க்கெட் அருகில் உள்ள கழிவுநீர் வெளியேற்றும் நிலையம் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை எல்லாம் மாநகராட்சி நிர்வாகத்தினர் கைப்பற்றி அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கூட்டத்தில் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us