/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஸ்ரீவை அருகே மெகா சூதாட்டம் ரூ. 1லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் :5 பேர் கைது, 3 பேருக்கு வலைஸ்ரீவை அருகே மெகா சூதாட்டம் ரூ. 1லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் :5 பேர் கைது, 3 பேருக்கு வலை
ஸ்ரீவை அருகே மெகா சூதாட்டம் ரூ. 1லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் :5 பேர் கைது, 3 பேருக்கு வலை
ஸ்ரீவை அருகே மெகா சூதாட்டம் ரூ. 1லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் :5 பேர் கைது, 3 பேருக்கு வலை
ஸ்ரீவை அருகே மெகா சூதாட்டம் ரூ. 1லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் :5 பேர் கைது, 3 பேருக்கு வலை
ADDED : செப் 22, 2011 12:03 AM
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் அருகே பணத்தைவைத்து சூதாடிய ஐந்து பேர் கைது செய்யப்ப ட்டனர் அவர்களிட மிரு ந்து 1லட்சத்து 88ஆயிரம் பணம் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் மூ ன்றுபேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது; ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி ஸ்டீபன்ஜேசுபாதம் தலை மையில் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அருள் முரு கன், செய்துங்கநல்லுர் இன் ஸ்பெக்டர் ராஜ், ஹெட் கான் ஸ்டெபிள்கள் ராதாகிரு ஷ்ணன், ஜெயராம சுப்பிரம ணியன், அங்கப்பன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுப் பட்டிருந்தனர். அப்போது வெள்ளூர் அருகேயுள்ள ஆதாளிகுளத்தில் பணத்தைவை த்து சூதாடிக் கொண்டி ருந்த சாத்தான் குளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த காஜாமு கைதீன் மகன் சேக் முகம்மது (38), வெள்ளூர் இசக்கி மகன் சித்திரை (46),சின்னத்தம்பி மகன் நல்லக்கண்ணு(44), பாலையங்கோட்டை திருஞானசம்மந்த நாயனார் தெரு வை சேர்ந்த தேவதாஸ் மகன் தன்ராஜ்(26), மேலப்பாளை யம் கணேசப்புரத்தை சேர்ந்த ஜெகந்நாதன் மகன் மோகன் (47),ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். பாளையங் கோட்டை திருஞானசம்மந்த நாயனார் தெருவை சேர்ந்த அந்தோணி மகன் ராஜா, சாத்தான்குளம் வேல் மகன் சுடலைமுத்து, பாளையங் கோட்டை ரகுமத்நகரை சேர் ந்திசை ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர் கைது செய்ய ப்பட்டவர்களிடமிருந்து 1லட்சத்து 88ஆயிரத்து 200 ரூபாய்,ரொக்க பணமும் 2 கார்கள்,2 பைக்குகள் மற்றும் 6 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸார் விசாரணை நடத் தி தப்பி ஓடிய மூன்று பேø ரயும் தேடிவரு கிறார்கள்