ADDED : செப் 21, 2011 01:05 AM
காயல்பட்டணம்: காயல்பட்டணத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு புதிய
பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்தது.காயல்பட்டணம் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை
மாநாட்டிற்கு நடராஜன் தலைமை வகித்தார்.
காயல்பட்டணம் கிளை செயலாளராக
மீண்டும் திருத்துவராஜ் தேர்வு செய்யப்பட்டு பல தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது. காயல்பட்டண 2வது குடிநீர் பைப் லைன் திட்டம்
நிறைவேற்றிட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது. காயல்பட்டண அரசு ஆஸ்பத்திரியில்
பேறுகால பெண் டாக்டரை நியமிக்க வேண்டும் என்றும், காயல்பட்டண போக்குவரத்து
நெருக்கடியை சரி செய்ய ஒரு வழி பாதை திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்
என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்திற்கு மாவட்ட
செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன் மற்றும்
கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.