அமெரிக்க மாகாணங்களில் பொருளாதார நிலைஎதிர்மறையாகவே உள்ளது: "மூடிஸ்' பகிரங்கம்
அமெரிக்க மாகாணங்களில் பொருளாதார நிலைஎதிர்மறையாகவே உள்ளது: "மூடிஸ்' பகிரங்கம்
அமெரிக்க மாகாணங்களில் பொருளாதார நிலைஎதிர்மறையாகவே உள்ளது: "மூடிஸ்' பகிரங்கம்

நியூயார்க்: 'இரு ஆண்டுகளுக்கு முன்பே பொருளாதார மந்தம் முடிந்து விட்டாலும் கூட, அமெரிக்க மாகாணங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களின் பொருளாதார நிலை, இன்னும் எதிர்மறையாகவே உள்ளது' என, கடன் மதிப்பீட்டு நிறுவனமான, 'மூடிஸ்' தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் கடன் உச்சவரம்பு அதிகரிப்பு விவகாரத்தின் முடிவில், அந்நாட்டின் கடன் மதிப்பீட்டுக் குறியீட்டை ஒரு படி குறைத்து,'மூடிஸ்' அறிவித்தது.
எனினும் அப்போதே, அமெரிக்க உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் குறியீடுகளையும்,'மூடிஸ்' ஒரு படி குறைத்தது.'மூடிஸ்' 2009ம் ஆண்டுக்கான வரி வருவாய் குறித்த அறிக்கையில், 3.7 டிரில்லியன் டாலர் ( ஒரு டிரில்லியன் - ஒரு லட்சம் கோடி; ஒரு டாலர் - ரூ.45) மதிப்பிலான அமெரிக்க உள்ளூர் நிர்வாகங்களின் கடன் பத்திரங்கள் மீதான தனது மதிப்பை, எதிர்மறையாகவே குறிப்பிட்டிருந்தது.இந்நிலையில், நேற்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:மாகாணங்களில் வரி மூலமான வருவாய் அதிகரித்துள்ளது. எனினும், பொது நலத் திட்டங்களுக்கு மத்திய அரசிடம், மாகாண அரசுகள் ஊக்க நிதி பெற்றது போதவில்லை.
பொது பட்ஜெட்டில் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என, இரு கட்சிகளுமே முடிவோடு தான் உள்ளன.அதன் விளைவு, மத்திய பொது நலத் திட்டங்களை மாகாண அரசுகள் செயல்படுத்தும் நிலையில், அத்திட்டங்களுக்கான நிதி குறையும்.அலபாமா, மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் ரோட் தீவு ஆகிய மாகாணங்களில் உள்ள நகரங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள் தங்கள் கடன்களை தீர்க்க வகையறியாமல், நொடித்துப் போகும் நிலையில் உள்ளன.இவ்வாறு,'மூடிஸ்' அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.