டெபாசிட் தொகை ஏமாற்றம் : வங்கி மேலாளர்கள் மீது வழக்கு
டெபாசிட் தொகை ஏமாற்றம் : வங்கி மேலாளர்கள் மீது வழக்கு
டெபாசிட் தொகை ஏமாற்றம் : வங்கி மேலாளர்கள் மீது வழக்கு
ADDED : செப் 20, 2011 11:45 PM
தேனி: டெபாசிட் செய்தவரை ஏமாற்றியதாக தனியார் வங்கியை சேர்ந்த ஐந்து மேலாளர்கள் உட்பட ஆறு பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போடி ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் தேவராஜன். 2008 டிச.,19ல் கரூர் வைஸ்யா வங்கியின் போடி கிளையில் 92 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தார். கால முதிர்வுக்கு பிறகு பணம் கேட்ட போது டெபாசிட் இல்லை எனக்கூறி, தர மறுத்து விட்டனர். தேவராஜன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார், வங்கியில் பணிபுரிந்த மேலாளர்கள் விருத்தாச்சலம், மோகன், மயிலேஷ், வெங்கடேஷன், ராமமூர்த்தி ஆகிய ஐந்து பேர் மீதும், உதவியாளர் ராஜேஷ் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்.